என் மலர்

  சினிமா

  அருள்நிதி படத்தின் முக்கிய அறிவிப்பு
  X

  அருள்நிதி படத்தின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு பிறகு அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Arulnithi
  அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன் சிறிய சம்பிரதாய சடங்குகளுடன் படப்பிடிப்பு துவங்கியது. குறிப்பிடத்தக்க வகையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் பரபரப்பான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. 

  எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படமாக உருவாகி இருக்கும், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

  அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோருடன் ஆகிய யோகிபாபு, காயத்ரி, ரமேஷ் திலக், 'எருமை சாணி' விஜய், 'கும்கி' அஸ்வின், 'ஜாங்கிரி' மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  பரத் நீலகண்டன் படத்தை இயக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.
  Next Story
  ×