என் மலர்
சினிமா

ஆயுர்வேத சிகிச்சை மூலம் எடையை குறைத்த அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க கடுமையாக பாடுபட்ட நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துவிட்ட அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. #AnushkaShetty
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் செல்கின்றன.

எடை ஏறியதால் இனி அனுஷ்கா சினிமாவில் நடிக்க முடியாது. விரைவில் திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிடுவார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்காவும் ஒரு முக்கிய தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnushkaShetty
Next Story






