என் மலர்tooltip icon

    சினிமா

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி
    X

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி

    தமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற ஜேடி.சக்கரவர்த்தி, தற்போது பெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் நடித்துள்ளார். #Pattarai
    தமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ஜேடி.சக்கரவர்த்தி. இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பட்டறை என்ற படம் உருவாகிறது. இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். 

    இந்தப் படத்தில் ரேணுகா, டிக்சானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கியமான சில கதாபாத்திரங்களில் திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. பீட்டர் ஆல்வின் படம் பற்றி பேசும் போது,

    நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை. வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை இந்தப் ‘பட்டறை’ திரைப்படம் சொல்லும்’ என்றார்.
    Next Story
    ×