search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர்ஸ்டார் சீனிவாசன் - மகள் பரபரப்பு பேட்டி
    X

    கந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர்ஸ்டார் சீனிவாசன் - மகள் பரபரப்பு பேட்டி

    நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டு ஊட்டியில் இருப்பதாக தகவல் கூறப்பட்ட நிலையில், தனது அப்பா கடத்தப்பட்டதாக சீனிவாசனின் மகள் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan
    நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 5-ந்தேதி மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

    அதில், “நண்பரை பார்க்க சென்ற எனது கணவர் திரும்பவில்லை. மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்” என்று கூறி இருந்தார்.

    இதனால் பவர்ஸ்டார் சீனிவாசனை மர்ம கும்பல் கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதாக தகவல் வெளியானது.

    பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே மோசடி புகார்கள் உள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகி இருந்தார்.

    இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பவர்ஸ்டார் சீனிவாசனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசும்போது ஊட்டியில் இருப்பதாக தெரிவித்தார். அங்குள்ள பங்களாவை விற்பனை செய்வது தொடர்பாக அவர் சென்றுள்ளார். அவர் ஊட்டியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளதால் பொறுமையாக இருக்கிறோம் என்றனர்.



    படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பவர்ஸ்டார் சீனிவாசன் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். தேனியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

    தேனியில் பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். இதுபோன்ற கந்துவட்டி கும்பலிடம் பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் அவரை அக்கும்பல் கடத்தி சென்றுவிட்டதாகவும் ஊட்டியில் உள்ள பங்களாவை தங்களது பெயருக்கு மாற்றி தரும்படி மிரட்டி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனின் மகள் வைஷ்ணவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    5-ந்தேதி காலை எனது தந்தையை போலீஸ்காரர்கள் என்று கூறி சிலர் ஒரு ஓட்டலுக்கு கூட்டி சென்றதாக டிரைவர் எனது தாயிடம் கூறினார்.

    உடனே அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாலை தந்தை செல்போனில் தொடர்பு கொண்டு எனது அம்மாவை ஒரு மருத்துவமனை அருகே வரச்சொன்னார். அங்கு சென்ற எனது அம்மாவிடம் சிலர் சொத்து விபரங்களை வாய்ஸ் ரெக்கார்டிங் செய்துவிட்டு இரவு 9 மணி அளவில் தந்தையை அனுப்புவதாக கூறி உள்ளனர்.

    ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை தந்தையை ஊட்டிக்கு அழைத்து செல்வதாக கூறி அம்மாவிடம் கூறி உள்ளனர். அவரை அங்கு வரசொல்லி விமான பயண டிக்கெட் போட்டு கொடுத்தனர்.



    அங்கு சென்ற அம்மாவும் தந்தையும் என்னிடம் மிகவும் பயத்துடனும், பதட்டத்துடனும் பேசினர்.

    பெங்களூரில் உள்ள ஒருவரிடம் தந்தை கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் தந்தையை கடத்தி இருக்கலாம் என போலீசில் புகார் அளித்தோம்.

    அப்போது போலீசார் இரவு ஊட்டி செல்லலாம் என்று கூறினார்கள். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PowerStarSrinivasan

    Next Story
    ×