என் மலர்
சினிமா

புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சோனாலி பிந்த்ரே சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார். #SonaliBendre
தமிழில் பம்பாய், காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இயக்குனரும், தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை மணந்த இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சோனாலி பிந்த்ரே, கடந்த ஜூலை மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புற்றுநோய்க்காக சோனாலி பிந்த்ரே நியூயார்க்கில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சோனாலி பிந்த்ரே இன்று மும்பை திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோல்டி பெல், “சோனாலி பிந்த்ரே நன்கு உடல் நலம் தேறி வந்து கொண்டிருக்கிறார். இனி மேற்கொண்டு சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல வேண்டியதில்லை. வழக்கமான பரிசோதனைகள் மட்டும் செய்துகொண்டால் போதும். உங்கள் அனைவரது ஆதரவுக்கு மிக்க நன்றி. அவர் மிகவும், உறுதியான, திடமான பெண். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார். #SonaliBendre
Next Story






