என் மலர்
சினிமா

விட்ட இடத்தை பிடிப்பேன் - சூளுரைத்த இலியானா
தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, அமர் அக்பர் ஆண்டனி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பதால், தான் விட்ட இடத்தை பிடிப்பேன் என்று கூறியுள்ளார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja
தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா கேடி, நண்பன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். பர்பி எனும் படம் மூலம் இந்தியில் நுழைந்த இலியானா அதற்குப்பின் தெலுங்குப் பக்கம் வரவே இல்லை.
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அமர் அக்பர் ஆண்டனி எனும் படம் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பி உள்ளார். ரவிதேஜா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கி உள்ளார். வரும் 16-ம் தேதி இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் இறங்கி உள்ளனர். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அதில் நடிகை இலியானா பேசும்போது, “கடந்த 2012-ம் ஆண்டு இதே ரவிதேஜாவுடன் ‘தேவ்டு செசினா மனசுலு’ என்ற படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அதே ரவிதேஜா மூலம் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தைப் பிடித்துத்தரும் என்று நம்புகிறேன்.
ஆறு வருடங்களுக்கு முன்பு ரவிதேஜாவிடம் இருந்த எனர்ஜி இந்தப் படத்தில் இன்னும் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்றார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja
Next Story






