search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
    X

    ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்

    சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் `ஜீனியஸ்' படம் உண்மை கதையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். #Genius #Suseenthiran #Roshan
    வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா என்று வெற்றிப் படங்களை கொடுத்த சுசீந்தரன் அடுத்து புதுமுகங்களான ரோ‌ஷன், பிரியா லால் நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ். படம் பற்றி கூறும்போது ‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு மனிதரை சந்தித்தேன்.

    நல்லா சரளமாக ஆங்கிலம் பேசிய அவர் பேச்சு, நடவடிக்கைகளில் நிறைய வித்தியாசம் இருந்தது. ‘நான் பேசுறதைப் பார்த்து என்னைப் பைத்தியம்னு நினைச்சிடாதீங்க. நான் கொஞ்சம் கன்ட்ரோல் இல்லாம இருக்கேன் அவ்ளோதான்’னு அவனுக்கு அவனே பேசிக்கிட்டு இருந்தான். அதிகமா படிச்சுப் படிச்சு அதுக்கான வடிகாலே இல்லாம இந்தத் தலைமுறையினர் இருக்காங்க.

    பெத்தவங்களும் படி படினு டார்ச்சர் பண்ணி, ஸ்கூல் முடிச்சா டியூசன், அந்த கிளாஸ் இந்த கிளாஸ்னு குழந்தைகளுக்குள்ள கல்வியைத் திணிக்கிறாங்க. அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பையன் வாழ்க்கையை எப்படி அணுகுறான் என்பதை எமோ‌ஷனோடு ஹியூமர் கலந்து இயக்கி இருக்கும் படம்தான், இந்த ‘ஜீனியஸ்’.



    வெறும் பள்ளி படிப்போடு மட்டுமே நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கை முழுக்க இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கூறி இருக்கிறேன். புதுமுகங்களை வெச்சு ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுக்க ஆசைப்படுறேன். அது மட்டுமல்லாமல், புதுமுகங்கள் சினிமாவுல ஏதாவது சாதிக்கணும்னு ஒரு வெறியோட வருவாங்க. அது நமக்கு ரொம்பவே பயன்படும்’ என்று கூறியுள்ளார். #Genius #Suseenthiran #Roshan

    Next Story
    ×