என் மலர்
சினிமா

நள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு
மீடூ விவகாரத்தில் பல பிரபலங்கள் பெயர்கள் அடிப்படும் நிலையில், தற்போது இயக்குனர் தியாகராஜன் மீது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். #MeToo
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வருகின்றன.
குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். நேற்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.
தற்போது இயக்குனர் தியாகராஜன் மீது இளம் பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பொன்னர் - சங்கர் படத்துக்கு தியாகராஜன்தான் இயக்குனர். அந்த படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகவும், நள்ளிரவில் என் ரூம் கதவை அவர் தட்டினார் என்றும் அந்த படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் இந்த குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.
Next Story






