search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது - பூர்ணா
    X

    சாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது - பூர்ணா

    திருமணம் தள்ளிப்போவது குறித்து பேசிய பூர்ணா, தன் திருமணம் தள்ளி போவதற்கு சாதி தான் காரணம் என்றும், சாதியை பெரிதாக நினைக்காமல், எந்த நிபந்தனையும் விதிக்காதவராக இருந்தால் திருமணம் செய்துகொள்ள தயார் என்றார். #Poorna
    நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பூர்ணா, விமல், ஆஸ்னா சவேரி நடிப்பில் உருவாகும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்து வருகிறார்.

    அவரது திருமணம் பற்றி கேட்டதற்கு ‘என் அம்மா தினமும் என் திருமணம் பற்றி பேசிவருகிறார். என் திருமணம் தள்ளி போவதற்கு காரணம் சாதி தான். சாதியையும் மீறி என்னை பெண் கேட்டு வருகிறவர்கள், திருமணத்திற்கு பின் நான் நடிக்க கூடாது என்று சொல்கிறார்கள்.



    காதல் திருமணம் செய்தாலும் இதே பிரச்சினை தான் இருக்கும். சாதியை பெரிதாக நினைக்காமல் எனக்கு எந்த நிபந்தனையும் விதிக்காதவராக இருந்தால் திருமணம் செய்துகொள்ள தயார்’ என்று கூறியுள்ளார். #Poorna

    Next Story
    ×