என் மலர்
சினிமா

மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படம் மூலம் புகழ் பெற்ற பிரியா பவானி சங்கர் அடுத்ததாக ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Monster
இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து இறவாக்காலம், சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அடுத்ததாக ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Next Story






