என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
By
மாலை மலர்29 Sep 2018 10:00 AM GMT (Updated: 29 Sep 2018 10:00 AM GMT)

சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவுக்கும், பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கும் வருகிற நவம்பரில் திருமணம் நடைபெற இருக்கிறது. #SujaVarunee #SivajiDev
ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது வாடீல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

சுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் காதலித்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில், சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் சுஜா வருணி தெரிவித்திருப்பதாவது,

தனக்கும் சிவகுமார் என்பவருக்கும் நவம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள், என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிவாஜி தேவ் தனது பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SujaVarunee #SivajiDev
Next Story
×