என் மலர்

  சினிமா

  பிரியா வாரியர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த ரசிகர்கள்
  X

  பிரியா வாரியர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணிக்க மலராயி பூவி பாடலுக்கு பிறகு ஒரு அடார் லவ் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அடுத்த பாடலுக்கு கிடைத்த டிஸ்லைக்குகள் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #OruAdaarLove #PriyaVarrier
  தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்க மலராயி பூவி என்ற பாடலில் தான் அந்த காட்சி இடம்பெற்றது.

  அந்த படத்தில் இருந்து சமீபத்தில் இன்னொரு பாடல் வெளியிடப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் ‘ப்ரீக் பெண்ணே’ என்னும் ராப் வகை பாடல் லைக்ஸை விட டிஸ்லைக்ஸை அதிகம் பெற்று மோசமான பாடலாக டிரெண்டிங்கில் இருக்கிறது.

  இதற்கு முன் ஜஸ்டின் பீபரின் ‘பேபி’ பாடல்தான் அதிக டிஸ்லைக்குகளைப் பெற்றிருந்தது. அதுவும் தற்போது லைக்ஸ்களால் முறியடிக்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த பாடலும் இணைந்திருக்கிறது. இரண்டு டிஸ்லைக் எண்ணிக்கைக்கும் இருக்கும் வித்தியாசம், சுமார் 2 லட்சத்து ஐம்பதாயிரம். இதனால் பிரியா வாரியரும் ஒரு அடார் லவ் படக்குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படம் வருகிற கிறிஸ்துமசுக்கு பல்வேறு மொழிகளில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #OruAdaarLove #PriyaVarrier

  ப்ரீக் பெண்ணே பாடலை பார்க்க:

  Next Story
  ×