என் மலர்

  சினிமா

  சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகும் அர்ஜுனா
  X

  சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகும் அர்ஜுனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேகா படம் மூலம் புகழ் பெற்ற நடிகை சிருஷ்டி டாங்கே தற்போது ஸ்ரீமணி இயக்கத்தில் விஜய் சந்தோஷ் நடிப்பில் உருவாகும் ‘அர்ஜுனா’ படத்தில் நடிக்க இருக்கிறார். #SrushtiDange
  ஸ்பைஸி கிளவுட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் ‘அர்ஜுனா’. இயக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத்துவக்க விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  இப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி எடிட்டிங் பணியை மேற்கொள்ள நிர்மல் இசையமைக்கிறார்.  இந்த படத்துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு “கிளாப்” அடித்து துவங்கி வைத்து, படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.
  Next Story
  ×