என் மலர்

  சினிமா

  சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
  X

  சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. #Dhanush #TheFakir
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது.

  நார்வே நாட்டின் ஹாகசண்டில் நார்வே சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இங்கு பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதில் தனுஷின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படமும் திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தேர்வுக் குழுவினர் படத்திற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளதாக படத்தின் இயக்குநர் கென் ஸ்காட் அவரது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தனுஷ் தற்போது அவரது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட கூட்டணியுடன் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #Dhanush #TheFakir 

  Next Story
  ×