என் மலர்tooltip icon

    சினிமா

    குணச்சித்திர நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவால் காலமானார்
    X

    குணச்சித்திர நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவால் காலமானார்

    பல்வேறு படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான கோவை செந்தில் உடல்நலக்குறைவால் காலமானார். #KovaiSenthil
    தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த நடிகை கோவை செந்தில் (74) உடல்நலக்குறைவால் காலமானார். 

    வெளிவந்த ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, படையப்பா, கோவா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள கோவை செந்தில் பாக்யராஜ் மற்றும் விக்ரமன் இயக்கத்தில் அதிகளவில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி காமென்யென்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    கோவையில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. பின்னர் கோவையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    கோவை செந்தில் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #KovaiSenthil

    Next Story
    ×