என் மலர்
சினிமா

பரத்துக்கு கை கொடுக்கும் கவுதம் மேனன்
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காளிதாஸ்’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை கவுதம் மேனன் வெளியிட இருக்கிறார். #KAALIDAS #Bharath
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், எம்.எஸ்.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.
பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மழை என்ற பாடலை இயக்குனர் கவுதம் மேனன் நாளை (27-8-2018) வெளியிட இருக்கிறார்.
நாளைய இயக்குநர் சீசன் - 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறிய ஸ்ரீசெந்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். #KAALIDAS #Bharath
Next Story