search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படுக்கைக்கு அழைத்ததாக தயாரிப்பாளர் மீது குற்றம்சாட்டிய புதுமுக நடிகை
    X

    படுக்கைக்கு அழைத்ததாக தயாரிப்பாளர் மீது குற்றம்சாட்டிய புதுமுக நடிகை

    ஸ்ரீரெட்டியை தொடர்ந்து, ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பாயல் ராஜ்புட் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். #PayalRajput
    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்த பிறகு நடிகைகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர்.

    நடிகைகள் பாதுகாப்புக்கு மலையாளம் மற்றும் தமிழ் பட உலகில் சங்கங்களும் ஆரம்பித்து உள்ளனர். சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினரும் திரையுலகில் நடிக்கும் பாலியல் குற்றங்களை கண்டித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாயல் ராஜ்புட் என்ற நடிகை தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். 

    பஞ்சாபி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பாயல் ராஜ்புட் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–



    ‘‘நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லைகள் குறித்து துணிந்து பேசிய பிறகும் நடிகைகளுக்கு செக்ஸ் தொந்தரவுகள் நடக்கத்தான் செய்கிறது. எனக்கும் அதுபோன்ற மோசமான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கில், ‘ஆர்எஸ் 100’ படத்தில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். அதற்கு பிரதிபலனாக படுக்கையில் தன்னை திருப்திபடுத்த வேண்டும் என்றார். அது எனக்கு அதிர்ச்சி அளித்தது. நான் திறமையால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். உங்கள் ஆசைக்கு இணங்க மாட்டேன் என்று கண்டிப்போடு கூறிவிட்டேன். இப்படி அவர் என்னை அழைத்தது மனதுக்கு வேதனையை அளித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PayalRajput

    Next Story
    ×