என் மலர்
சினிமா

பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அக்னி தேவ்’ படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AgniDev #RemyaNambeesan
பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த ஆண்டு ‘கருப்பன்’, ‘திருட்டு பயலே 2’ என இரண்டு படங்கள் வெளியாகிய நிலையில், அவர் வில்லனாக நடித்துள்ள ‘சாமி ஸ்கொயர்’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
பாபி சிம்ஹா தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நடிகை மதுபாலா, சதிஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். #AgniDev #RemyaNambeesan
Next Story






