என் மலர்
சினிமா

பள்ளி மாணவர்களுக்காக ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
திரு இயக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sivakarthikeyan #Thiru
திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து இயக்குநர் திரு அவரது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஒரு நல்ல காரியத்திற்காக இந்தப் பணியில் இருவரும் இணைந்துள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் இயக்குநர் திரு குறிப்பிட்டுள்ளார். கரும்பலகை, பள்ளி மாணவர்கள் இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்ச்சி ஆவணப்படமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. #Sivakarthikeyan #Thiru
Next Story






