என் மலர்
சினிமா

இரண்டாவது முறையாக சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை
கவுதம்மேனன் - சிம்பு கூட்டணி அடுத்ததாக இணையவிருக்கும் `விண்ணைத்தாண்டி வருவாயா' இரண்டாம் பாகத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #STR #Anushka
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது.
இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவன் பேசப்பட்ட நிலையில், தற்போது முதல் பாகத்தில் நடித்த சிம்புவே திரும்பவும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்னும் தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது. இதில் அனுஷ்கா நடிக்கவைக்கப்பட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கவுதம் மேனன் இயக்கத்திலும், வானம் படத்தில் சிம்புவுடனும் அனுஷ்கா இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Anushka
Next Story