என் மலர்
சினிமா

வெற்றி கூட்டணியில் உருவாகி வரும் ஜீனியஸ்
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனியஸ்’ படத்தில் வெற்றி கூட்டணி இணைந்திருக்கிறது. #Genius
இயக்குனர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் ‘நான் மகான் அல்ல’ , ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படங்களாக அமைந்தது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து வரிகளில், சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.
சிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Next Story






