search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இயக்குனர் சங்கரை நெகிழ வைத்த உதவி இயக்குனர்கள்
    X

    இயக்குனர் சங்கரை நெகிழ வைத்த உதவி இயக்குனர்கள்

    திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை கொண்டாடி வரும் இயக்குனர் சங்கருக்கு அவரோடு பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் அவரை நெகிழச் செய்திருக்கிறார்கள். #Shankar
    ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். அர்ஜுன், மதுபாலா நடித்திருந்த இப்படம் 1993ம் ஆண்டும் ஜூலை 30ம் தேதி வெளியானாது. இப்படம் நேற்றுடன் 25 ஆண்டுகளைத் தொட்டது மட்டுமன்றி, இயக்குனர் சங்கர் திரையுலகிற்கு அறிமுகமாகியும் 25 ஆண்டுகளாகியுள்ளது.

    இதுவரை சங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் சங்கர்.

    இந்நிலையில், சங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் சங்கரிடம் ஆரம்பகால கட்டத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களிலிருந்து, இப்போது பணிபுரியும் உதவி இயக்குனர்கள் வரை கலந்து கொண்டார்கள். பிரபல இயக்குனர்களாக இருக்கும் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அறிவழகன், அட்லீ உள்ளிட்ட அனைவருமே இதில் பங்கேற்றார்கள்.



    இதில் உதவி இயக்குனர்கள் அனைவருமே சங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி, அதனை ஒரு புத்தகமாக தொகுத்து அதனை பரிசாக வழங்கியிருக்கிறார்கள். 

    அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். உதவி இயக்குனர்களுடனான சந்திப்பு குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் “உதவி இயக்குனர்களின் அன்பால் நெகிழ்ந்துவிட்டேன். அவர்கள் அனைவரும் இல்லாமல் எனது பயணம் சாத்தியமில்லை” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குனர் சங்கர்.
    Next Story
    ×