என் மலர்
சினிமா

யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
சாம் சிஸ் இசையில் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கும் ஒரு பாடலை நடிகர் மாதவன் வெளியிட இருக்கிறார். #Madhavan
‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே, அந்த வரிசையில் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர்.
இவரது இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘வஞ்சகர் உலகம்’. இப்படம் வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.

யுவனும் அதற்கு ஓகே சொல்ல, அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். இந்த பாடலை நடிகர் மாதவன் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
Next Story






