என் மலர்
சினிமா

அடுத்த கமல் தனுஷ்தான் - கஸ்தூரி
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் டீசரை பார்த்த கஸ்தூரி, அடுத்த கமல், தனுஷ்தான் என்று கூறியிருக்கிறார். #VadaChennai
‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதல் பாகத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு டிரெண்டிங்கானது. இதைப் பார்த்த நடிகை கஸ்தூரி, ‘வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்!’ என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் ! #VadaChennaiTeaser@VetriMaaran@dhanushkraja@LycaProductions@aditi1231
— Kasturi Shankar (@KasthuriShankar) July 28, 2018
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைகா புரொடக்ஷன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.
Next Story






