என் மலர்

  சினிமா

  மதுபானக்கடை இயக்குனருடன் வட்டம் போடும் சிபிராஜ்
  X

  மதுபானக்கடை இயக்குனருடன் வட்டம் போடும் சிபிராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்யா படத்தை தொடர்ந்து மதுபானக்கடை இயக்குனருடன் சிபிராஜ் நடிக்க இருக்கும் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். #Vattam #Sibiraj
  சிபிராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சத்யா’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசனும், முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்தனர். 

  இதைத் தொடர்ந்து ‘ரங்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார் சிபிராஜ். இதில் இவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார். வினோத் என்ற அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

  இந்நிலையில், ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ். காதல் மற்றும் ஆக்‌ஷன் கலவையான இந்தப் படம், கோயம்புத்தூரைப் பின்னணியாகக் கொண்டு உருவாகிறது. 6 வருடங்களுக்குப் பிறகு கமலக்கண்ணன் இயக்கும் படம் இது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘வட்டம்’ எனத் தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  Next Story
  ×