என் மலர்

  சினிமா

  புற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய சோனாலி பிந்த்ரே
  X

  புற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய சோனாலி பிந்த்ரே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு புற்றுநோய் இருப்பதை தயங்கி தயங்கி தனது மகனிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre
  தமிழில் பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே.

  திரைப்பட இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்ட இவர், 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனாலி பிந்த்ரே தற்போது நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சோனாலி அவரது சமூக வலைதள பக்கத்தில், தனது மகன் ரன்வீருடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எனது மகன் ரன்வீர், வலிமை மற்றும் நல்ல விசயத்திற்கான அடிப்படையாக இருக்கிறான் என தெரிவித்துள்ளார்.

  அவன் 12 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 8 நாட்களுக்கு முன் பிறந்தது, எனது மனதில் ஆச்சரியத்தினை நிறைத்தது. அதில் இருந்து அவனது மகிழ்ச்சி மற்றும் நலம் ஆகியவையே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாக இருந்தது.  புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது குறித்து, அதனை அவனிடம் சொல்வதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. அவனை பாதுகாக்க நாங்கள் அதிகம் விரும்பினோம். அவனிடம் அனைத்து உண்மைகளையும் கூறுவது அவசியம் என அறிந்திருந்தோம். எப்பொழுதும் திறந்த மனதுடன் மற்றும் நேர்மையுடனேயே நடந்து கொண்டோம். அவன் இந்த விசயத்தினை பக்குவமுடன் எடுத்து கொண்டான்.

  எனக்கு வலிமையாகவும், நல்ல விசயத்திற்கான அடிப்படையாகவும் ஆகிவிட்டான். அவன் கோடை விடுமுறையில் இருக்கிறான்.  அவனுடன் நான் நேரம் செலவிட்டு வருகிறேன். நாங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் வலிமையை பெற்று கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். #SonaliBendre

  Next Story
  ×