என் மலர்
சினிமா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #KKK #DulquerSalmaan
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர்.
துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோலோ படத்திலும் வேர்ல்டு ஆஃப் சிவா என்ற பாடலை இந்த குழு தான் உருவாக்கியிருந்தது.
Energetic team.... pic.twitter.com/RQkzmGfCeD
— Desingh Periyasamy (@desingh_dp) July 19, 2018
இந்த நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையமைக்க மசாலா காஃபி குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வருண் சுனில் ஆரம்பித்த மசாலா காஃபி குழுவில் சூரஜ் சந்தோஷ், பிரீத் பி.எஸ், டேவிட் கிரிம்சன், பாலி, ஜோ ஜான்சன், கிருஷ்ண ராஜ் மற்றும் தயா சங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
எஃப்.டி.எஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. #KKK #DulquerSalmaan
Next Story