என் மலர்
சினிமா
X
சமுத்திரக்கனி நடிப்பில் 12 மணிநேரத்தில் நடிக்கும் கதை பற
Byமாலை மலர்14 July 2018 6:03 PM IST (Updated: 14 July 2018 6:03 PM IST)
சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடிப்பில் ‘பற’ என்ற படம் உருவாகி வருகிறது. #Samuthirakani
சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும், அநீதிகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடிக்கும் படம் ‘பற’.
வர்ணாலயா சினி கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் நிறுவனும் தயாரிக்கும் இந்த படத்தை பச்சை என்கிற காத்து, மெர்லின் படங்களை இயக்கிய வ.கீரா இயக்குகிறார். படம் பற்றி கூறும்போது,
பிளாட்பாரத்தில் வாழ வழியற்ற ஒருவன், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பும் காதலர்கள், வயதான காலத்தில் தனிமையிலிருந்து விடுபட கிளம்பும் முதியோர்கள், ஒரு திருடன், ஒரு வழக்கறிஞர், ஒரு கட்சி தலைவர், ஒரு கிளப் டான்சர் என பல்வேறு மாந்தர்களின் வாழ்க்கையில் ஓர் இரவில் தொடங்கி அடுத்த பகலில் முடியும் 12 மணி நேர கதைதான் ’பற’.
படத்தில் சமுத்திரகனி, சாந்தினி, முனிஸ்காந்த், நிதிஷ் வீரா, முத்துராமன், சாஜீ மோன், வெண்பா, தீக்கதிர் குமரேசன், கம்பம் மீனா, சூப்பர் குட் சுப்ரமணி, பேராசிரியர் செல்வக்குமார், அஸ்மிதா, வின்னர் ரமச்சந்திரன், பிரின்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.’ என்றார். #Samuthirakani
Next Story
×
X