என் மலர்

  சினிமா

  சிம்புவுக்காக அரசியலை விட்ட டி.ராஜேந்தர்
  X

  சிம்புவுக்காக அரசியலை விட்ட டி.ராஜேந்தர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர், அடுத்ததாக அரசியல் படம் எடுக்க இருந்த நிலையில், மகன் சிம்புவுக்காக அதை கைவிட்டிருக்கிறார். #STR #Simbu
  இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் தான் அடுத்து இயக்கும் ’இன்றையக் காதல்டா’ படத்தின் விபரத்தை நேற்று அறிவித்தார்.

  அரசியல் காமெடி படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் முழு நீள காதல் படத்தை இயக்குவது ஏன்? என்று கேட்டோம். ‘முதலில் முழுநீள அரசியல் காமெடி படம்தான் எடுக்க திட்டமிட்டேன். இந்த தகவல் அறிந்த என் மகன் சிம்பு என்னிடம் உங்களது பலமே காதல் கதை தான்.

  காதல் படங்கள் தான் உங்கள் முத்திரை. நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே தான் நான் அரசியலை விட்டு காதலை படமாக்குகிறேன். வீராசாமி படத்தை கிண்டலடித்தார்கள். எனவே இதில் சென்டிமென்ட் அதிகம் இருக்காது’ என்றார்.   இன்றையக் காதல்டா படத்தில் டி.ராஜேந்தருக்கு வில்லியாக டான் வேடத்தில் நமீதா நடிக்கிறார். அவருக்கு கணவராக நடிக்க ஒரு கதாநாயகனிடம் பேசி வருகிறார்கள்.
  Next Story
  ×