என் மலர்

  சினிமா

  வரலட்சுமி படத்தின் முக்கிய அறிவிப்பு
  X

  வரலட்சுமி படத்தின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தான் நடித்துள்ள ஒரு படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். #VaralaxmiSarathkumar #VelvetNagaram
  ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

  தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

  இதில் வெல்வெட் நகரம் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.  தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #VaralaxmiSarathkumar #VelvetNagaram
  Next Story
  ×