என் மலர்

  சினிமா

  அந்த வார்த்தையை கேட்டாலே கோபம் வரும் - ரித்திகா ஸ்ரீனிவாஸ்
  X

  அந்த வார்த்தையை கேட்டாலே கோபம் வரும் - ரித்திகா ஸ்ரீனிவாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வழக்கு எண், நிமிர்ந்து நில் படங்களில் நடித்து பிரபலமான ரித்திகா ஸ்ரீனிவாஸ் நடிப்பில் அடுத்ததாக டிக் டிக் டிக் படம் ரிலீசாக இருக்கும் நிலையில், ரித்திகா தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். #RethikaSrinivas
  வழக்கு எண் படத்தில் கல்வி அதிபராக வந்து மிரட்டியவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தொடர்ந்து நிமிர்ந்து நில், மாசு என்கிற மாசிலாமணி உள்பட பல படங்களில் நடித்தவர் விரைவில் வெளியாக இருக்கும் டிக் டிக் டிக் படத்தில் கர்னலாக நடித்து இருக்கிறார். ‘என் சினிமா வாழ்க்கையில் வழக்கு எண் படத்திற்கு பிறகு முக்கியமான படம் இது. காரணம் இந்த வகையே நமது நாட்டுக்கு புதியது.

  இனி இதுபோன்ற விண்வெளி படங்கள் நிறைய வரும். அதற்கான தொடக்கப்புள்ளி இது. இந்த கதாபாத்திரத்துக்காக 6 கிலோ எடை குறைத்தேன். நான் அதிகமாக வில்லி கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறேன்.

  அந்த கதாபாத்திரங்களை விரும்பி தான் தேர்ந்தெடுக்கிறேன். நல்லவராகவே நடிப்பது போர் அடிக்கிறது. திருமணத்துக்கு பின் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று வரைமுறை சொல்வது எனக்கு பிடிக்காது. கணவர் அனுமதித்தால் என்ற வார்த்தையை கேட்டாலே கோபம் வரும்.  அவர் ஏன் நம்மை அனுமதிக்க வேண்டும்? திருமணம் வேறு. நடிப்பு வேறு. எனக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது’ என்று அதிரடியாக பேசும் ரித்திகா கையில் நான்கு படங்கள் இருக்கின்றன. #RethikaSrinivas

  Next Story
  ×