என் மலர்
சினிமா

ஆயிரம் பொற்காசுகளுக்காக காத்திருக்கும் வித்தார்த்
புதுமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கத்தில் வித்தார்த் - அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி வரும் ஆயிரம் பொற்காசுகள் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Vidharth
கபாலி, தசாவதாரம் என 500-க்கும் மேற்பட்ட படங்களில் செட்டிங் மாஸ்டர், சாபு சிரில், பிரபாகரன், முத்துராஜ், கதிர், ராஜீவன் உள்ளிட்ட கலை இயக்குநர்களிடம் உதவியாளர் என சினிமாவில் சுமார் 39 வருடங்களாக பணிபுரிந்து வரும் ஜி.ராமலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `ஆயிரம் பொற்காசுகள்'.
வித்தார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக சைத்தான் பட நாயகி அருந்ததி நாயர் நடித்திருக்கிறார். ரவி முருகையா இயக்கியிருக்கும் இந்த படத்தில் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜோஹன் இசையில், பானுமுருகன் ஒளிப்பதிவில் செய்திருக்கும் இந்த படத்திற்கு ராம் - சதீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
புதையலை கருவாக கொண்டு கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Vidharth
Next Story






