search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
    X

    தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா

    மலையாள நடிகரை திருமணம் செய்துக் கொண்ட நஸ்ரியா, மீண்டும் படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Nazriya
    திருமணத்துக்கு பின் நடிக்க வரும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார் நஸ்ரியா. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    பெங்களூரு டேஸ் படப்பிடிப்பில் இருந்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போதே அந்த படத்தின் இயக்குனர் அஞ்சலி, பகத் பாசிலிடம் நஸ்ரியா தொடர்ந்து நடிப்பாரா? என்று கேட்டதற்கு அது அவருடைய விருப்பம் தான். நான் தலையிட மாட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். உங்கள் அடுத்த படத்திலேயே வேண்டுமானால் நடிக்க வையுங்கள் என்று விளையாட்டாக கூறி இருக்கிறார்.

    ஆனால் அது உண்மையாகி போனது. அஞ்சலி மூன்று ஆண்டுகள் கழித்து இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து நடிக்க கதைகளும் கேட்டு வருகிறார்.
    Next Story
    ×