என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் என்னதவம் செய்தேனோ
By
மாலை மலர்7 Jun 2018 5:42 AM GMT (Updated: 7 Jun 2018 5:42 AM GMT)

பணபலமும் கொண்ட ஒரு பிரபல பெரும்புள்ளியின் திமிர்பிடித்த மகளை வாடகை வண்டியின் மூலம் தெருவில் ஐஸ் விற்று பிழைக்கும் இளைஞன் காதலிக்கும் படம் என்னதவம் செய்தேனோ.
எஸ்.செந்தில் குமார் இணைந்த கைகள் கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் டைரக்டர் பேரரசுவின் உதவியாளர் முரபாசெலன் இயக்கத்தில் “என்னதவம் செய்தேனோ” என்ற புதிய படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்தப்படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இம்மாத (ஜுன்) இறுதியில் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இப்பொழுதே செய்து வருகிறார்கள்.
அரசியல் செல்வாக்கும், பணபலமும் கொண்ட ஒரு பிரபல பெரும்புள்ளியின் திமிர்பிடித்த மகளை வாடகை வண்டியின் மூலம் தெருவில் ஐஸ் விற்று பிழைக்கும் இளைஞன் காதலிக்கிறான். அவனது துணிச்சலை பார்த்து அந்தப் பெண்ணும் காதலிக்க தொடங்குகிறாள். பெரும் புள்ளிக்கும், அவனது அடியாட்களுக்கும் தெரியவருகிறது, தப்பி பிழைக்க ஊரை விட்டு ஓடிய காதலர்கள் இணைந்தர்களா? அவர்களை எதிர்த்து உயிருடன் வாழ்ந்தார்களா? என்பதன் விளக்கம் தான் “என்னதவம் செய்தேனோ” படத்தின் கதை ஆகும்.

இதில் கதாநாயகனாக கஜினிமுருகன், கதாநாயகியாக விஷ்ணு பிரியா, பிரியாமேனன், பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, மயில்சாமி, டெல்லிகணேஷ், ஆர்த்தி கணேஷ், பான்பராக் ரவி, கிலுகிலுப்பூட்டும் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடனமாடி இருக்கிறார் நடிகை ரிஷா, பணம் பலம் படைத்த பெரும்புள்ளியாக, காதலர்களுக்கு வில்லனாக ஆர்.என்.ஆர். மனோகரன் நடித்திருக்கிறார்.
தேவ்குரு இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரபாசெலன் இயக்கி இருக்கிறார்.
Next Story
×