search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
    X

    அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா

    நடிகர் சிவா, அஜித், விஜய், விஷால், தனுஷ் ஆகியோரை கலாய்த்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி இருக்கிறார். #TamizhPadam2Teaser #TamizhPadam2
    மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதனே இயக்கி வரும் இதிலும் ஹீரோவாக சிவாவே நடித்துள்ளார்.

    சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கண்ணன் இசையமைத்து வரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். 



    இந்த டீசரில் விஷாலின் துப்பறிவாளன், ஆம்பள, விஜய்யின் துப்பாக்கி, மெர்சல், அஜித்தின் விவேகம், மங்காத்தா, தனுஷின் விஐபி, விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை கலாய்த்து வெளியாகி இருக்கிறது. இந்த டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி உள்ளது. 
    Next Story
    ×