என் மலர்

    சினிமா

    நீண்ட தேடலுக்குப் பிறகு ஜீவாவிற்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜு முருகன்
    X

    நீண்ட தேடலுக்குப் பிறகு ஜீவாவிற்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜு முருகன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    'ஜிப்ஸி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை நீண்ட நாட்களாக தேடிவந்த ராஜுமுருகன் தற்போது கண்டுபிடித்து ஒப்பந்தம் செய்துள்ளார். #Jiiva
    'குக்கூ' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இப்படத்தை அடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தற்போது 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார். 

    இதில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகி தேடும் படலம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிப்பது உறுதியாகியுள்ளது.

    நடாஷா சிங் மிஸ் இமாச்சல பிரதேஷ் பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் தனி இடத்தைப் பெற்ற இவர் ‘ஜிப்ஸி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.



    ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் 'ஜிப்ஸி' படத்தைத் தயாரிக்கிறார். இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×