என் மலர்
சினிமா

நடிகர் ரவிச்சந்திரன் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனும், தொழிலதிபருமான எஸ்.ஆர்.பாலாஜி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். #Ravichandran #SRBalaji
காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நாயகனாக நடித்தவர் ரவிச்சந்திரன். அவர் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள்.
ரவிச்சந்திரனின் மகன்களில் ஹர்ஷவர்தன், ஜார்ஜ் விஷ்ணு இருவரும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு மகனான எஸ்.ஆர்.பாலாஜி தொழில் அதிபர். சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 55.
இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Ravichandran #SRBalaji
Next Story






