என் மலர்

  சினிமா

  இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை - ஸ்ருதி ஹாசன்
  X

  இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை - ஸ்ருதி ஹாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்பு குறைந்திருப்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். #ShrutiHaasan
  தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசனுக்கு இப்போது படங்கள் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:-

  “ஏதோ படத்தில் நானும் இருந்தேன் என்பது மாதிரி கதைகள் இனிமேல் தேவை இல்லை. நல்ல கதை, திருப்தியான கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிப்பேன். அதற்காகத்தான் படங்களை குறைத்துள்ளேன். பெயர் சொல்வது மாதிரி படத்தில் முழு சக்தியையும் காட்டி நடிக்க வேண்டும். வந்தோம் போனோம் என்றெல்லாம் இருக்க கூடாது என்பதில் தெளிவாகி விட்டேன்.  எனது கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எளிதில் திருப்தி அடைய மாட்டேன். மனதுக்கு பிடிக்கிற மாதிரி நடிப்பு வருவது வரை திரும்ப திரும்ப நடிப்பேன். இப்போது நல்ல கதைகள் அமையாததால் நடிக்கவில்லை. இனிமேல் பாடகியாக வளர முயற்சி செய்கிறேன். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது முடிவு. தற்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை.”

  இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
  Next Story
  ×