என் மலர்

  சினிமா

  மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் நயன்தாரா
  X

  மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் நயன்தாரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
  விஜய் சேதுபதியும் நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

  இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது. இப்படத்தில் கதநாயகி இருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியில்லை என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் சில முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  அப்படி நடிக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நயன்தாராவிடம் விஜய் சேதுபதியே பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தைப் போலவே இப்படத்திலும் காமெடியான திரைக்கதை இருக்குமாம். வருகிற ஏப்ரல் 24-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

  இப்படம் மேடைக் கலைஞரை மையப்படுத்திய கதையாம். விஜய் சேதுபதி ஒரு மேடை கலைஞராக நடிக்கவிருக்கிறாராம். இது விஜய் சேதுபதி நடிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×