என் மலர்
சினிமா

சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
ஆவணப்படம் ஒன்றில் நடித்த நடிகை தன்ஷிகா, அதற்கான சம்பளத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
‘மாவீரன் திலீபன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆனந்த மூர்த்தி. சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. இவர் தற்போது ‘சினம்’ என்ற ஆவண படத்தை தயாரித்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இது மும்பையில் வசிக்கும் ஒரு பாலியல் தொழிலாளி பற்றிய கதை. இதில் பாலியல் தொழிலாளியாக தன்ஷிகா நடித்து இருக்கிறார்.
இந்தி நடிகை பட்டியாபக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் பற்றி கூறிய இயக்குனர்...

இந்த ஆவண படத்தில் நடிக்க தன்ஷிகா சம்பளம் வாங்கவில்லை. கொடுத்த போதும் வாங்க மறுத்துவிட்டார். இதை சினிமாவாக தயாரிக்கலாம். ஆனால் தணிக்கை குழுவை தாண்டி வருவது கஷ்டம். எனவே ஆவண படமாக எடுத்தோம். என்றாலும் சினிமாவுக்குரிய எல்லா அம்சமும் இருக்கும்’ என்றார்.

Next Story