என் மலர்tooltip icon

    சினிமா

    விக்ரம் படத்தின் அடுத்த அறிவிப்பு
    X

    விக்ரம் படத்தின் அடுத்த அறிவிப்பு

    விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் விக்ரம்-தமன்னா நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் இன்று வெளியாக உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்போம்.
    நடிகர் விக்ரம் ஒரே நேரத்தில் `துருவ நட்சத்திரம்', விஜய் சந்தர் இயக்கும் பெயரிடப்படாத படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பல போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அமெரிக்காவில் தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. இதில் விக்ரம் ‘பெப்பர் அன்ட் சால்ட்’ தோற்றத்தில் தாடியுடன் நடிக்கிறார். மேலும் பிரித்விராஜ், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.



    அடுத்து விஜய்சந்தர் இயக்கத்தில் வடசென்னை இளைஞனாக, தாடி இல்லாத மழித்த முகம், கருப்பு முடியுடன் விக்ரம் நடிக்கிறார். முதல் முறையாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை சாயலில் எடுக்கப்பட்டு வரும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து மே மாதம் முதல், ஹரியின் இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவரை ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கும் நடைமுறையை விக்ரம் கடைபிடித்து வந்தார். இந்த ஆண்டு முதல் முறையாக ஒரே தடவை 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×