என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை பாவனா கடத்தலில் என்னை தொடர்புபடுத்துவதா? நடிகர் திலீப் கண்டனம்
    X

    நடிகை பாவனா கடத்தலில் என்னை தொடர்புபடுத்துவதா? நடிகர் திலீப் கண்டனம்

    நடிகை பாவனா கடத்தலில் தன்னை தொடர்புபடுத்துவதாக நடிகர் திலீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி இரவில் ஓடும் காரில் ஒரு கும்பலால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.

    நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின்  செல்போன் அழைப்புகளை போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள் மலையாள திரையுலகின் முன்னணி பிரமுகர்கள்,  தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர் ஒருவருடன் பேசி இருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. அதில் நடிகர் திலீப்பும், அவரது முதல் மனைவி மஞ்சுவாரியரும்  பிரிவதற்கு நடிகை பாவனா தான் காரணம் என்றும், இதன் காரணமாக பாவனாவுக்கும் திலீப்புக்கும் இடையே மனக் கசப்பு  ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் எதிரொலியாக நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்தபோது  பாவனாவுக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை. மேலும் பாவனா தனக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததற்கு நடிகர்  திலீப் காரணம் என்று நேரிடையாகவே குற்றம்சாட்டி இருந்தார்.



    இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் காரணமாக இப்போது பாவனா கடத்தப்பட்டு இருக்கலாம் எனவும்  சமூக ஊடங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

    இதற்கு திலீப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேரளாவில் இப்படி யொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. யாருக்கும் இப்படியொரு நிலை ஏற்படக்கூடாது.

    இந்த விவகாரம் தொடர் பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அது சரியான கோணத்தில் செல்கிறது.  போலீசாரின் விசாரணையை திசை திருப்பும் முயற்சிகளில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது.

    போலீசாரும் சமூக ஊடகங்கள் தவறான கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோல தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களின்  கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    இதில், நடிகை அமலாபால், அவரது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:-



    நடிகை பாவனா, தனக்கு நேர்ந்த கொடுமையை மூடி மறைக்காமல் தைரியமாக போலீசில் புகார் செய்துள்ளார். அவரது  தைரியத்திற்கும், கடினமான இந்த முடிவை மேற்கொண்ட தற்கும் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாவனா மற்ற நடிகர், நடிகைகளுக்கு உதாரணமாக மாறி உள்ளார். உறுதியுடன் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது,  கண்டிப்பாக வெற்றிபெற முடியும். குற்றம் செய்தவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் அனைவரின் முன்பும் நிறுத்த  முடியும். இவ்வாறு செய்வதின் மூலம் தவறான செயலில் ஈடுபடுபவர்கள் தயங்குவார்கள்.

    நடிகை பிரியாமணி:- இச்சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஒரு நடிகைக்கு இப்படியொரு சம்பவம்  நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. எந்த பெண்ணுக்கும் இது நடக்கக் கூடாது. படப் பிடிப்புக்காக நடிகைகள் கண்ட கண்ட  நேரத்தில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. நடிகை பாவனாவுக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து எனக்கு சொல்ல முடியாத  அளவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

    கன்னட நடிகை ராதிகா பண்டிட்:- கதாநாயகிகளுக்கு கார்கள்தான் பாதுகாப்பாக இருந்து வந்தது. படப்பிடிப்பின் இடைவெளியில்  ஓய்வு எடுக்க, டச்-அப் செய்ய கார்களை பயன்படுத்தி வந்தோம். பாவனாவுக்கு நேர்ந்தது பற்றி தெரிய வந்ததும், பயமாக  உள்ளது.
    Next Story
    ×