என் மலர்

  சினிமா

  தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற எமன்
  X

  தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற 'எமன்'

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'எமன்' படத்தின் படக்குழு அளித்துள்ள பேட்டியை கீழே பார்ப்போம்.
  ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'எமன்'. இப்படத்தை, 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கமும், 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்தில் தியாகராஜன், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் போது வெளியாக உள்ள 'எமன்' படம் குறித்து படக்குழு தெரிவித்ததாவது,

  இயக்குநர் ஜீவா சங்கர்: 'எமன்' படம் தற்போதைய அரசியல் கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டு உருவான கதை அல்ல. இப்படத்தின் கதையை பல ஆண்டுக்கு முன்பே தான் எழுதிவிட்டதாக கூறிய ஜீவா சங்கர், ஒருவன் தான் செய்யும் செயல்களுக்கான கர்ம வினைகளை அதே பிறவியிலேயே அனுபவிப்பான் என்பதை முக்கிய கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தியாகராஜனை மனதில் கொண்டே கதை எழுதியாகவும் ஜீவா சங்கர் தெரிவித்தார். இப்படத்திற்கான கதை, வசனங்கள் அனைத்தும் முன்பே எழுதப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களை திருப்திபடுத்தும் படியாக 'எமன்' இருக்கும். பிச்சைக்காரன் படத்தில் 500, 1000 ரூபாய் ஒழிப்பு வசனம், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அமைந்தது போல் 'எமன்' படமும், அதன் வசனங்களும் பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

  விஜய் ஆண்டனி: இப்படத்திற்காக தான் யாரையும் பின்பற்றவில்லை. கதைக்கு தேவையானதை இயக்குநர் கேட்டதால் அதற்கேற்ப நடித்துள்ளேன் என்றார்.

  தியாகராஜன்: எதிர்மறையான கதாபாத்திரம் என்பதால் கதையின் வலு குறையக்கூடாது. எனவே இயக்குநர் தன்னை எவ்வாறு சித்தரித்துள்ளாரோ அதற்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றியதாக தியாகராஜன் தெரிவித்தார்.

  மியா ஜார்ஜ்: இப்படத்திற்கான கதை சொல்வதற்கு முன்பே ஜீவா சங்கர், விஜய் ஆண்டனி கூட்டணியில் நடிக்க தான் ஒப்பு கொண்டேன். `அமரகாவியம்' படத்திற்கு பிறகு ஜீவா சங்கர் இயக்கத்தில் நடித்திருப்பது நல்ல அனுபவம் என்றார். இப்படத்தில் "என் மேல கைவச்சா காலி" என்ற பாடலுக்கு தான் குத்தாட்டம் போட்டிருப்பதாகவும் மியா கூறினார்.

  பிப்ரவரி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 'எமன்' படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×