என் மலர்

    சினிமா

    விஜய்சேதுபதியின் தர்மதுரை ரிலீஸ் தேதி உறுதியானது
    X

    விஜய்சேதுபதியின் தர்மதுரை ரிலீஸ் தேதி உறுதியானது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அது என்ன தேதி? என்பதை கீழே பார்ப்போம்...
    விஜய்சேதுபதி - தமன்னா - சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்மதுரை’. இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், ‘தர்மதுரை’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நேற்று இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘யு’ சான்றிதழ் வாங்கிய சந்தோஷத்துடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உடனடியாக அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வருகிற ஆக.19-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

    கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். ராதிகா சரத்குமார், அருள்தாஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார்.

    Next Story
    ×