என் மலர்
சினிமா

கடாக முத்திரையன் கதையை நாடகமாக நடத்துவேன்: ஒய்.ஜி.மகேந்திரன் உறுதி
"நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் கடைசி ஆசையை நிறைவேற்ற, கடாக முத்திரையன் கதையை நாடகம் ஆக்குவேன்'' என்று ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.

நாடகமும், சினிமாவும் மகேந்திரனுக்கு இரண்டு கண்கள் என்றால், மூன்றாவது கண் டெலிவிஷன் சீரியல்!
மூன்று துறைகளிலும் பிசியாக இருக்கிறார், அவர். தன்னுடைய அரை நூற்றாண்டு கலைப்பயணம் பற்றி அவர் கூறியதாவது:-
"மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால், மீண்டும் இந்த ஒய்.ஜி.பி. கலைக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நடிப்பும், படிப்பும் ஒருங்கே இணைந்து அதில் வெற்றி பெறுவது அபூர்வம். அந்த அபூர்வமான சாதனையை செய்தது ஒய்.ஜி.பி. குடும்பம். எனவேதான் மீண்டும் இந்தக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.
நான் சிறு வயதிலேயே தபேலா வாசிக்கக் கற்றுக்கொண்டேன். இந்திப்பட உலகின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகர் முகமத் ரபிக்கு நான் தீவிர விசிறி. நான் சிறுவனாக இருந்தபோது, இசை நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். என் தந்தையின் அழைப்பிற்கிணங்க, எங்கள் வீட்டில் விருந்து சாப்பிட வந்தவர், மறுநாள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு, எங்கள் வீட்டிற்கு வந்து தங்கினார்.
அப்போது அவர் பாட, நான் தபேலா வாசித்தேன். என் வாசிப்பை அவர் பாராட்டினார். உலகின் மிகச்சிறந்த பின்னணி பாடகருக்கு, சிறு வயதிலேயே தபேலா வாசித்தது எனக்கு "ஆஸ்கார்'' விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை அளித்தது.
என்னுடைய ஆரம்ப கால மானசீக குருவாக இருந்தவர் பட்டு. காமெடி நடிப்புக்கு என் குரு நாகேஷ்.
நடிப்பு என்றால் சிவாஜிதான். நேற்றும், இன்றும், நாளையும் நான் சிவாஜியின் பரம பக்தன்.
நடிப்புக்கு சிவாஜி, காமெடிக்கு நாகேஷ், இசைக்கு கண்ணதாசன் என்று என் நெஞ்சில் இடம் பெற்று விட்டார்கள். கண்ணதாசனை மிகவும் பிடிக்கும் என்றாலும், வைரமுத்துவும் என் நெருங்கிய நண்பர். காலம் ஒத்துழைத்து, "காதலிக்க நேரமுண்டு'' நாடகம் படமானால், அதில் இடம் பெறும் பாடல்கள் "வைர வரி''களாக இருக்கும்.
இளையராஜாவின் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது சமீபத்திய திருவாசக "சி.டி'', அவரை மிகவும் நேசிக்க வைத்தது.
நடிகர் தங்கவேலுவின் "டைமிங்'', சந்திரபாபுவின் அங்கசேஷ்டைகள் ஆகியவையும் என்னைக் கவர்ந்தவை.
ஏவி.எம். தயாரிப்பில் போக்கிரிராஜா, பாயும்புலி, நல்லவனுக்கு நல்லவன், சகலகலாவல்லவன் உள்பட 15 படங்களில் நடித்திருக்கிறேன். ஏவி.எம். பொன் விழா புத்தகத்தில், என்னுடைய படமும், நான் நடித்த 15 படங்களின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய "கல்யாண வைபோகமே'' என்ற நாடகம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நாடகத்தை இயக்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
தெலுங்கில் விஜயநிர்மலா இயக்கத்தில் 6 படங்களில் நடித்துள்ளேன். "ராஜபார்வை'' தெலுங்குப் பதிப்பில், எனக்கு விருது கிடைத்தது.
தெலுங்கில் 2 தொலைக்காட்சி தொடர்கள் செய்தேன். அதில் ஒரு தொடருக்கு நந்தி விருது கிடைத்தது.
இந்தியில் 2 படங்களில் நடித்தேன். "ஏக் குட்டி ஆஸ்மான்'' என்ற படத்தில் விஜய் அரோராவுடனும், முக்காபுலா படத்தில் கோவிந்தாவுடனும் நடித்தேன்.
என் மீது நம்பிக்கை வைத்துள்ள இன்னொரு டைரக்டர் பாலு மகேந்திராதான். அவருடைய "மூன்றாம் பிறை'', "நீங்கள் கேட்டவை'' ஆகிய படங்களில் நடித்தேன்.
கன்னடத்தில் கமல் நடித்து பாலுமகேந்திரா இயக்கிய படம் "கோகிலா:'' அதை "ஊமைக்குயில்'' என்ற பெயரில், மலையாளத்தில் எடுத்தார். அதில் நான் ஹீரோ. பூர்ணிமா ஜெயராம் ஹீரோயின். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி பிறகு பிரபல நட்சத்திரமாகி, இப்போது நடிகர் அஜித்தின் மனைவி.
"வெள்ளை மனசு'' என்ற படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் ரம்யாகிருஷ்ணன்.
"நீர், நிலம், நெருப்பு'' என்ற படத்தில், நான் முழுக்க முழுக்க கோவணத்துடன் நடித்தேன்! அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
சார்லி சாப்ளின் கல்லÛ
நாடகம் நடத்துவதற்காக நான் பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். சுவிட்சர்லாந்தில், நகைச்சுவை நடிப்புக்கு அகில உலகுக்கும் முன்னோடியாகத் திகழும் சார்லி சாப்ளின் கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செய்தேன்.
இந்தக் கல்லறை பிரமாண்டமானதாகவோ, தனி இடத்திலோ இல்லாமல் மற்ற கல்லறைகளுடன் சேர்ந்து, பத்தோடு பதினொன்றாக இருக்கிறது.
நாடக உலகில் ஆர்.எஸ்.மனோகர் செய்த சாதனைகளைப் பாராட்டுகிறேன். புராணம், இதிகாசம் தொடர்பான நாடகங்களை மேடை ஏற்ற அவர் பட்ட சிரமங்கள், அதற்காக ஏற்பட்ட செலவுகள் மிக அதிகம்.
தான் நாடகம் நடத்த உடல் நிலை ஒத்துழைக்காதபோது, அவர் என் நாடகத்திற்கு வந்து பார்த்தார். அவருக்கு என்ன தோன்றியதோ, தன்னுடைய "கடாக முத்திரையன்'' நாடகத்தை நடத்தும்படி என்னிடம் கூறினார். நானும் ஒப்புக்கொண்டுவிட்டு அமெரிக்கா போய்விட்டேன்.
திரும்பி வருவதற்குள் மனோகர் மறைந்து விட்டார். "கடாக முத்திரையன் நாடகத்தை மகேந்திரன் நடத்த வேண்டும்'' என்று தன்னிடம் மனோகர் சத்தியம் வாங்கிக் கொண்டதாக அவருடைய மனைவி கூறினார். மனோகரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவேன். எவ்வளவு செலவானாலும், கடாகமுத்திரையனை விரைவில் நாடகமாக்குவேன்.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
மகேந்திரனின் குடும்பத்தில் அனைவரும் மேடை ஏறி நடிக்கக்கூடியவர்கள்.
மகேந்திரனின் மகன் ஹர்ஷா, லண்டன் சென்று பிலிம் மற்றும் வீடியோ தொழில் நுட்பக் கல்வி படித்து, தங்க மெடல் பெற்று திரும்பியவர். டைரக்டர் ஆகவேண்டும் என்பது அவர் லட்சியம். இதன் காரணமாக, கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு தலைமை உதவி டைரக்டராகப் பணிபுரிகிறார்.
மகள் மதுவந்தி நடிப்பு, நடனம் இரண்டையும் கற்றவர். தற்போது லண்டனில் இருக்கிறார். திருமதி ஒய்.ஜி.பி. பெயரால், மேல்நாட்டுத் தரத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, கலைவாணர் விருது, ஆந்திர அரசின் விருது முதலியவற்றை பெற்றவர், மகேந்திரன்.
மைலாப்பூர் அகாடமி விருதுகளை பலமுறை பெற்றவர்.

Next Story