என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    'அவதார்' படத்தின் 2-வது பாகம் 2018-ம் ஆண்டு வர வாய்ப்பில்லை என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் வசூலைக் குவித்த படம் 'அவதார்' ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த 'அவதார்' 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் வரலாறுகளை முறியடித்தது. 'அவதார்'  படத்தின் வசூல் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.



    இதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். இந்த நிலையில், 2018-ம் ஆண்டில் 'அவதார்' படத்தின் 2-வது பாகம் வர வாய்ப்பில்லை என அமெரிக்க நாளிதழ் ஒன்றிற்கு நேற்று அளித்த பேட்டியில் கேமரூன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக 2014-ம் ஆண்டு 'அவதார் 2’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிட்டது.
    வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் `தீரன் அதிகாரம் ஒன்று' படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் சத்யன்சூரியன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் `காற்று வெளியிடை' படம் ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம்  இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நேற்று வெளியான  இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    அது ஒருபுறம் இருக்க. கார்த்தி தற்போது `சதுரங்க வேட்டை' புகழ் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து  வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, பூஜ்  பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படபிடிப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



    யதார்த்தமான படப்பிடிப்பு தளமாக இருப்பதால் இப்பகுதியில் படபிடிப்பு நடத்த முடிவு செய்ததாக கூறிய ஒளிப்பதிவாளர் சத்யன்  சூரியன், படத்தின் முக்கியமான காட்சிகளையும் அப்பகுதியிலேயே படமாக்கி வருகிறார்.

    மேலும் ஆக்சன் காட்சிகளை பூஜ் பகுதியில் பரபரப்பாக எடுக்க உள்ளனர். இதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட்  அமைப்பில் ஒரு "ஹை வே" ஆக்சன் காட்சி ஒன்றும் படமாக்கப்படவுள்ளது. அங்கு படமாக்கப்படும் அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு  விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறியுள்ளார்.



    இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும்  இப்படத்தில் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை  தயாரிக்கின்றனர்.
    ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் நேற்று மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியாகி உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இந்து மத நம்பிக்கையையும், அடையாளங்களையும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இந்துக்கள் பூஜிக்கும் சிவனின் பெயரை இழிவுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.



    ஆகவே நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் சாய்ரமணி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, படத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படங்கள் திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஷால், பி.ஆர்.பாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாய பயிர்கள் கருகியதை கண்டு பல விவசாயிகள் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்துகொண்டும் இறந்தனர். இறந்த விவசாயிகளின் புகைப்பட திறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புகைப்படங்களை திறந்து வைத்து, இறந்த 250 விவசாயிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். அனைத்து விவசாயிகளுக்கும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.



    இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால், நடிகர் ஆதி, மெரினா போராட்டக்குழு இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் விஷால் பேசும்போது, ‘விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை நிகழாமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தும், விவசாயத்துக்கு ஊக்கம் அளிப்பதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன்’ என்றார்.

    பி.ஆர்.பாண்டியன் பேசும்போது, பயிர்கள் கருகியதை கண்டு 275 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வராததே இதற்கு காரணம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வழங்க வேண்டும் என்றார். பின்னர் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவை சந்தித்து மனுவை வழங்கினார்.
    சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி கேட்க நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டில் சுவர் ஏறி குதித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மும்பை ஜூகு பகுதியில் நடிகர் அமிதாப்பச்சனின் ‘ஜல்சா’ பங்களா வீடு உள்ளது. இங்கு அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    அமிதாப்பச்சனின் வீட்டில் வாலிபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவர் அந்த வாலிபரை ஜூகு போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபரின் பெயர் ரகுமான் கான் (வயது 19) என்பதும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்காத் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.



    நோயால் பாதிக்கப்பட்ட இவரது சகோதரிக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. இந்தநிலையில் கஷ்டப்படுபவர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் உதவி செய்வதாக ரகுமான் கான் கேள்விப்பட்டு உள்ளார்.

    எனவே அவர் நடிகர் அமிதாப்பச்சனை நேரில் சந்தித்து தனது சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி பெறலாம் என நினைத்து மும்பை வந்துள்ளார். பின்னர் அமிதாப்பச்சனின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து ரகுமான் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    பல கோடிகள் புரளும் திரைப்பட தொழிலில் நஷ்டத்தை போக்க தீர்வு காண வேண்டும் என்று பட விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    வைகை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ஆர்.கே கதாநாயகனாக நடித்துள்ளார். நாசர், ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர், நீதுசந்திரா, இனியா ஆகியோரும் நடித்துள்ளனர். ஷாஜி கைலாஜ் டைரக்டு செய்துள்ளார்.

    இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    “திரைப்பட தொழிலில் பல கோடிகள் புரள்கிறது. ஆனாலும் படங்கள் ஓடுவதில்லை. புதிதாக தயாராகும் படங்களையும் திரைக்கு கொண்டு வர முடியவில்லை. கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளிக்கும் பெண்ணைப்போல் சினிமா உலகம் இருக்கிறது. அதை மன வேதனையோடும் இறுக்கமான மன நிலையிலும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

    சினிமாவை காப்பாற்ற வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. ரஜினிகாந்தை வைத்து படங்கள் எடுக்கலாம், வளரலாம் என்ற கனவுகளுடன் தான் தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. சினிமாவில் பணத்தை இழந்து நஷ்டமடைவது ஒரு புறம் இருந்தாலும் அவர்கள் ஏமாற்றப்படும் சூழ்நிலையும் இருக்கிறது.



    திரைப்பட தொழில் நஷ்டத்தை போக்க தீர்வு காண வேண்டும். சினிமாவில் பழைய முறைகளை களைந்து புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பணம் சம்பாதித்து சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஆர்.கே. டிக்கெட் விற்பவர்களுக்கு கமிஷன், குறிப்பட்ட டிக்கெட் எடுப்பவர்களுக்கு இலவச டிக்கெட் என்று படம் வினியோகத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த திட்டம் வெற்றி பெற வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.”

    இவ்வாறு நாசர் பேசினார்.

    பெப்சி தலைவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, “புதிய படங்கள் திரைக்கு வருவதை யார் யாரெல்லாமோ நிறுத்துகிறார்கள். கோர்ட்டிலும் தடை வாங்குகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் படம் திரைக்கு வரும் முன்பே நூதன வினியோக முறையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இருப்பதை தயாரிப்பாளர் சங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
    திரையுலக பிரபலங்களின் லீலைகளை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகியின் லீலைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    திரையுலக பிரபலங்கள் பலரின் திரைமறைவு லீலைகளை பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி திரையுலகையே பரபரப்பாகியது. அதில், கொலவெறி நடிகரை சுற்றித்தான் நிறைய புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தது. அதேபோல், கொலவெறி நடிகர் மீதான தாக்குதல்கள்தான் அந்த டுவிட்டரில் அதிகப்படியாக இருந்தது.

    இந்நிலையில், கொலவெறி நடிகரின் ரசிகர்கள் அந்த பின்னணி பாடகிக்கு எதிராக கிளம்பியுள்ளார்களாம். தங்களுடைய தலைவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் பின்னணி பாடகி மட்டும் ஒழுங்கா? என்று கேள்விகளும் எழுப்பி வருகிறார்களாம். மேலும், பின்னணி பாடகி, பொது மேடையிலேயே மற்ற நடிகர்களுடன் எப்படி நெருக்கமாக ஆடிப்பாடுகிறார்? என்பதற்கு சான்றாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

    அந்த வீடியோவில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றில் பாடகி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு நடிகரோடு சேர்ந்து நடனமாடுகிறார். நடனத்தின்போது அந்த நடிகரை வலியப் போய் பாடகி இழுத்து, கட்டிப் பிடித்து ஆடுவதுபோல் உள்ளது. நடிகருடன் வலியப்போய் நெருங்கி ஆடும் இந்த பின்னணி பாடகி, மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதுதான் அந்த ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது. 
    ரஜினியின் 2.ஓ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினிகாந்த் நடித்த மற்றொரு படமான ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. இதனால், இரண்டு படங்களிலும் ரஜினி மாறி, மாறி நடித்து வந்தார். ‘கபாலி’ படத்தை முடித்த கையோடு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    ஓய்வுக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில்தான் எமி ஜாக்சன், தனது சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டதாக அறிவித்திருந்தார்.



    இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த காட்சிகள் படமாக்கியவுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.

    மேலும், ‘2.ஓ’ படத்திற்காக எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி படமானவுடன் படக்குழுவினருடன் ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த வருடம் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜெய்-அஞ்சலி நடித்துவரும் ‘பலூன்’ படத்தில் தற்போது ஜனனி ஐயரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    5 வருடங்களுக்கு பிறகு ஜெய் - அஞ்சலி இணைந்து நடித்துவரும் புதிய படம் ‘பலூன்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் சினிஷ் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி ஐயர் நடித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    கதைப்படி, ஜனனி ஐயர், ஜெய்யை காதலிப்பதுபோல் படத்தில் வருவாராம். இவருடைய கதாபாத்திரத்திலிருந்து படத்தின் கதை நகரும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஜனனி ஐயர் செண்பகவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் பிளாஸ்பேக்கில் வருவதுபோன்று உருவாகியிருக்கிறதாம்.



    ஜனனி ஐயர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையை அடுத்த கானாத்தூரில் அமைந்துள்ள மாயாஜால் திரையரங்கில் 2 நாட்கள் படமாக்கி முடித்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஏப்ரல் முதல் வாரத்தில் கொடைக்கானலில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆர்.கே.நடிப்பில் உருவாகியுள்ள வைகை எக்ஸ்பிரஸ் படம் நான்கு வாரம் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடும் என்று ஆர்.கே. நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    மக்கள் பாசறை தயாரிப்பில் ஆர்.கே. நடிக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இன்றைய நிலையில் படம் தயாரிப்பதுகூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும், அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..?

    அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே., “உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதை வேண்டுமானாலும் சந்தைப்படுத்தி விடலாம். கற்றுக்கொடுப்பதுதான் வாழ்க்கை. நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்தேன். சினிமா துறை பல கோடி வர்த்தகம் நடக்கும் இடம். பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடம். ஆனால், நசிந்து கிடக்கிறது.



    300 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டில் ஒருவன் படம் பார்த்துட்டு, குடும்பத்தைக் கூட்டிட்டுப் போக முடியலயே என்கிற ஆதங்கத்தில், படம் மொக்கை என்று நண்பன் சொல்லிட்டான் என்று தனது குடும்பத்திடம் பொய் சொல்கிறான். 600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட்கூட விற்கமாட்டேங்குது. நான் 300 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன் 3 பேர் டிக்கெட்டு எடுத்தா 2 பேரை இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன். குடும்பம் குட்டியோட மக்கள், சந்தோஷமா படம் பார்க்கட்டுமே.

    அப்படி உருவானதுதான் ஹிட் பாக்ஸ். இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கான உத்திரவாதமான முதல் படி. ஆயிரம் விநியோகஸ்தர்களை உருவாக்கினேன். ஐயா திருட்டு விசிடி விக்கிறாய்ங்கன்னு சொன்னார்கள். இது உங்கள் சினிமா உங்கள் வியாபாரம் என்று ஊக்கப்படுத்தினேன். களமிறங்கி ஜெயித்திருக்கிறார்கள்.



    ஆன்லைன்ல புக் பண்ணா எவனோ ஒருத்தன் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சம்பாதிக்கிறான். கேட்டா சர்வீஸ் சார்ஜு என்கிறான். 10 டிக்கெட் புக் பண்ணாலும் 300 ரூபாய் வாங்கிவிடுகிறான். இதை முதலில் ஒழிக்கவேண்டும். எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள். என் ஏழைத் தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே.

    ஹிட் பாக்ஸ் மூலமா எட்டு கோடி பேரும் தியேட்டர்ல வந்து படம் பார்ப்பார்கள். வைகை எக்ஸ்பிரஸ், தொடர்ந்து நான்கு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடும். ஹிட் பாக்ஸ் விநியோகம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ் சினிமாவுக்கு ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலம் வருகிறது. எதிர் காலத்தில் எங்கள் படங்களையும் ஹிட் பாக்ஸ் மூலம் விநியோகியுங்கள் என்று எல்லோரும் வருவார்கள்." என்றார்.



    கைலாஷ் இயக்கியிருக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார் கனல் கண்ணன். வசனத்தை வி.பிரபாகர் கையாண்டிருக்கிறார். ஆர்.கே, நீது சந்திரா, இனியா, கோமல் சர்மா, சுஜா வாருணி, நாசர், ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஸ்ரீரஞ்சனி, காமெடி டைம் அர்ச்சனா, பவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், கதிரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் உள்ள மிகப் பிரபலமான கிரிக்கெட் மைதானத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் இங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    துபாய்:

    ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

    'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.

    இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ‘இன்ட்டிமேட்’ என்ற இசை சுற்றுலா மேற்கொண்டிருந்தார்.

    அங்குள்ள முக்கிய பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    பின்னர், பிரிட்டன் நாட்டிலும் தனது ‘இன்ட்டிமேட்’  இசை சுற்றுலாவை மேற்கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி லண்டன் நகரிலும், 24-ம் தேதி பிர்மிங்ஹம் நகரிலும், 29-ம் தேதி லீட்ஸ் நகரிலும், 30-ம் தேதி மான்செஸ்ட்டர் நகரிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘இன்ட்டிமேட்’ இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


    இதையடுத்து, வரும் 13-ம் தேதி சார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்சிக்காக 5000 திர்ஹம் முதல் 2 லட்சம் திர்ஹம் வரை கட்டணம் கொண்ட டிக்கெட்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    சில நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்தில் சலுகை கட்டணத்தில் டிக்கெட்களை விற்று வருகின்றன. ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுவதால் டிக்கெட்டுகளை பெற இங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் பின்னணி பாடகர்-பாடகியர் பாடவுள்ளனர்.
    ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்தது குறித்து இயக்குனர் சாய்ரமணி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்ஸுக்கு அளிக்கப்பட்ட இந்த பட்டத்தை யார் வழங்கியது? என்பது பலரது கேள்வியாக எழுந்தது. மேலும், ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.

    இந்நிலையில், திரையில் தோன்றிய ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தார். மேலும், அந்த பட்டத்தை தனக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குனர்தான் அளித்ததாகவும், அந்த பட்டம் தான் தகுதியானவன் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், இயக்குனர் சாய் ரமணியும் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வழங்கியது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, என் படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ் அவர்களின் நற்செயல்களையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்த பட்டம் அவரை ஆச்சர்யப்பட வைக்கவில்லை. என்னை உடனே கூப்பிட்டு கண்டித்ததது மட்டுமில்லாமல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்றும், எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

    படத்தில் வரும் அந்த பட்ட பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில்கொண்டு மன்னித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×