என் மலர்
மதுரை மாநாட்டில் குட்டி கதை கூறிய விஜய் மதுரை... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
மதுரை மாநாட்டில் குட்டி கதை கூறிய விஜய்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்க பலமாக இருக்க ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகின்றனர். அதில் ஒருவர் தான் தேர்வாக வேண்டும். ஆனால் 10 பேர் தேர்வாகியிருப்பதால், அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அவர்களிடம் 3 மாதத்தில் இதை நன்றாக வளர்த்து கொண்டு வாருங்கள் என கூறி விதை நெல்லை கொடுத்து அனுப்புகிறார். 3 மாதம் கழித்து வரும்போது, அதில் ஒருவர் அந்த விதை நெல்லை ஆளுயரத்துக்கும், மற்றொருவர் தோள் உயரத்துக்கும் என 9 பேர் நன்றாக வளர்த்து கொண்டு வந்தனர்.
அதில் ஒருவர் மட்டும் வெறும் கையுடன் வந்தார். என்ன என கேட்டபோது, ‘நானும் தண்ணீர் ஊற்றி ஊற்றி பார்க்கிறேன். நெல் வளரவேயில்லை’ என்றார். உடனே ராஜா அவரை கட்டியணைத்து நீ தான் என்னுடைய தளபதி, எல்லா அதிகாரமும் உனக்கு தான் என்றார். காரணம் 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல். அது ஒருபோதும் முளைக்காது.
ஆக அந்த 9 திருட்டு பயல்களும் வேறு விதை நெல்லை வாங்கி வளர்த்து, ராஜாவையும், மக்களையும் ஏமாற்றியிருந்த நிலையில், அதில் ஒருவர் மட்டும் உண்மையை உடைத்துவிட்டார். ஒரு நாட்டுக்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உண்மையும், நேர்மையும் முக்கியம். அந்த வகையில் நீங்கள் எல்லோரும் தான் அந்த ராஜா, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த தளபதி...” என்று தெரிவித்தார்.






