search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹிலக்ஸ் எலெக்ட்ரிக் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்த டொயோட்டா!
    X

    ஹிலக்ஸ் எலெக்ட்ரிக் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்த டொயோட்டா!

    • டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் H2 ப்ரோடோடைப் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புது ப்ரோடோடைப் மட்டுமின்றி டொயோட்டா நிறுவனம் IMV0 கான்செப்ட்-யும் அறிமுகம் செய்து இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. தாய்லாந்தில் தனது 60 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் ஹிலக்ஸ் ரெவோ எலெக்ட்ரிக் கான்செப்ட்-ஐ டொயோட்டா அறிமுகம் செய்தது.

    கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் பிக்கப் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் மர்மமாக உள்ளன. ஹிலக்ஸ் பிக்கப் எலெக்ட்ரிக் வெர்ஷனின் வெளிப்புறம் க்ளோஸ்டு கிரில், ஸ்லேடெட் டிசைன், இடது புறத்தில் சார்ஜிங் போர்ட், புதிய அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ஃபாக் லேம்ப் ஹவுசிங், பின்புறத்தில் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள், ஃபிளாட் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    "ஊடகம் நம்மை நம்ப வைக்க முயல்வதை விட, எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரும்பான்மையாக மாற அதிக நேரம் எடுத்துக் கொள்ள போகின்றன. உலகின் சுற்றுச்சூழல் மாசில்லா இலக்கை அடைய எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. தனிப்பட்ட முறையில், நான் எல்லா வாய்ப்புகளையும் பின்பற்ற நினைக்கிறேன். இதில் மாசில்லா சின்தெடிக் ஃபியூவல்கள் மற்றும் ஹைட்ரஜன் உள்ளிட்டவையும் அடங்கும்," என டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் அகியோ டொயோட்டா தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×