என் மலர்
இது புதுசு

620 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
- போல்ஸ்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
- இது போல்ஸ்டார் நிறுவனத்தின் இரண்டாவது ப்ரோடக்ஷன் மாடல் ஆகும்.
போல்ஸ்டார் நிறுவனம் தனது இரண்டாவது சீரிஸ்-ப்ரோடக்ஷன் மாடலை போல்ஸ்டார் 3 பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இவை காருக்கு 517 ஹெச்பி பவர், 910 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
வால்வோவின் SPA2 பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் போல்ஸ்டார் 3 வால்வோ EX90 காரின் ட்வின் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். போல்ஸ்டார் 1 மற்றும் 2 வால்வோ கான்செப்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் போல்ஸ்டார் 3 டிசைன் மற்றும் கான்செப்ட் முழுக்க முழுக்க போல்ஸ்டார் மூலம் வடிவமைக்கப்பட்டது.
போல்ஸ்டார் 3 மாடல் டூயல் மோட்டார் பவர்டிரெயினுடன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இவை ஒருங்கிணைந்து 489 ஹெச்பி பவர், 840 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் ரியர்-சார்ந்த ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.0 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
பெர்பார்மன்ஸ் பேக் பயன்படுத்தும் போது இந்த கார் 517 ஹெச்பி பவர், 910 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். 111 கிலோவாட் ஹவர் பேட்டரி பயன்படுத்தும் போது போல்ஸ்டார் 3 மாடல் முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.






