search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    குறைந்த விலையில் ஏத்தர் 450X புதிய வேரியண்ட் - இந்தியாவில் அறிமுகம்
    X

    குறைந்த விலையில் ஏத்தர் 450X புதிய வேரியண்ட் - இந்தியாவில் அறிமுகம்

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450X மாடல் புதிய வேரியண்ட் 6.2 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது.
    • புதிய ஏத்தர் 450X வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450X புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏத்தர் 450X வேரியண்ட் 146 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. எனினும், எண்ட்ரி லெவல் மாடல் என்பதால், இதில் ஃபாஸ்ட் சார்ஜிங், ரைட் மோட்கள், கனெக்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

    எண்ட்ரி லெவல் ஏத்தர் 450X மாடல் ஒலா S1 ஏர், டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஆம்பியர் பிரைமஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ஏத்தர் 450 பிளஸ் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

    அம்சங்களை பொருத்தவரை ஏத்தர் 450X மாடலில் பெருமளவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 6.2 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    குறைந்தவிலை மாடல் என்பதால் இதில், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரைட் மோட்கள், பார்க் அசிஸ்ட், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ் நேவிகேஷன், லைவ் டிராக்கிங், ஒடிஏ அப்டேட்கள் மற்றும் கலர் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. இந்த அம்சங்கள் அனைத்தும் ஏத்தர் நிறுவனத்தின் உயர் ரக ஸ்கூட்டர்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஏத்தர் 450X புதிய பேஸ் வேரியண்ட் விலை ரூ. 98 ஆயிரத்து 079 எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் ட்ரூ ரெட், காஸ்மிக் பிளாக், ஸ்பேஸ் கிரே, லூனார் கிரே, சால்ட் கிரீன் மற்றும் ஸ்டில் வைட் என ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×